Saturday 21 January 2012

thinga thikku mukkaada udalil koluppu thanga adharku thaga....

    திங்க திக்குமுக்காட உடலில் கொழுப்பு
    தங்க அதற்குத் தக...  இப்படியா உண்பது.... இல்லை .... இது சிரிக்க மட்டும்தான் செரிக்க அல்ல... 


                              உணவே மருந்து 

தாய்வழி  கிடைக்கின்ற முதற் பொருள்
வாய்வழி போகின்ற முக்கிய பொருள்
ஆறுமாதம் முடியும்வரை தாய்ப்பால் மட்டும்
வேறுசாதம் அதன்பின் சேர்த்தால் ஒட்டும்

செரிக்கப்பட்டு வயிற்றில் சிறிதாகும் உணவு
எரிக்கப்பட்டு சக்தியாய் உடலுக்காகும் வரவு
அளவான உணவை அமிர்தமென அருந்து
அளவாக உண்டால் அதுவே மருந்து

இரத்தக் கொதிப்பை  சீராக வைத்திடு
நித்தம் உப்பை உணவினில் குறைத்திடு
அலுப்புடன் இருக்கும் உடலினைத் தவிர்த்திடு
கொழுப்புடன் இருக்கும் உணவினைக் குறைத்திடு

எளிதாக செரியும் உணவினை உண்க
தெளிவாக தெரியும் பலன்களை காண்க
பார்வை நன்கு தெரிய வைக்கும்
சோர்வை நீக்கி தெளிய வைக்கும்

உள்ளம் அமைதி பெற மனப்யிற்சி
உணவு செரிமானம் பெற உடற்பயிற்சி
உணவுடன் செய்திடு அதையும் சேர்த்து
உலகையே மயக்கிடு கட்டுடலால் ஈர்த்து

உயிர் வாழ்வதற்கு உண்பது நன்று
உயிர் வாழ்வதே உண்பதற்கு அன்று
மதுவும் ஓருணவே எனினும் அஞ்சு
அதுவும் அளவுக்கு மீறினால் நஞ்சு

செல்வது உள்ளே எந்தளவு முக்கியம்
செல்வது வெளியே அதேயளவு முக்கியம்
ஒருநாளும் கழியாதே காலைக்கடன் அடைக்காமல்
ஒருநாளும் உண்ணாதே கழிவுகளை அகற்றாமல்

பசிக்காக புசித்தால் உடலில் தங்கும்
ருசிக்காக புசித்தால் உடல்நிலை மங்கும்
நேசித்து உண்ணப்படும் உணவு விருந்தாகும்
யோசித்து உண்ணப்படும் உணவே மருந்தாகும்

யோசிப்பதும் நேசிப்பதும் உன் விருப்பம்
வாசிப்பதும் எழுதுவதும் என் விருப்பம்
எழுதிவிட்டேன் எனக்கு தெரிந்த உண்மை
பழுதுநீக்கி உண்டால் உனக்கு நன்மை

அளவான நல்ல உணவே மருந்தாகும்
வளமான நல்ல வாழ்வுக்கு வழியாகும்.
உணவே மருந்தென உணர்ந்து விடு!
உடலையும் மனதையும் வென்று விடு!!   


                                                                                 
         
    
 
 
 
 

 
      


No comments:

Post a Comment