Thursday 26 January 2012

India (anrum, inrum)

             உயிர்(எழுத்து)இந்தியா 
                  (அன்றும் இன்றும்)

அன்னியர் ஆட்சியை அகற்றிய நாடு
அதன்பின் அரசியல்வாதி கைப்பற்றிய நாடு

ஆங்கிலேயர் ஆட்சியே நல்லது என்று
ஆமோதிக்கும் அளவு உள்ளது இன்று

இதிகாசம் இலக்கியங்கள் பல பார்த்திருக்கின்றது
இறக்கம் கொண்டு குற்றத்தை ஊக்குவிக்கன்றது

ஈடு இணையற்ற இந்திய நாடு
ஈரமும் இரக்கமும் மறந்த நாடு

உலகத்தில் வளங்களில் முதலிடம் பெற்றது
உலகத்தில் ஊழலில் முதலிடம் பெற்றது

ஊரெங்கும் கலையும் கலாச்சாரமும் சிறந்தது
ஊறிய நாகரிகத்தில் அவ்விரண்டும் இறந்தது

எதுவும் தனக்கென்று எண்ணாதோரின் ஆட்சி
எல்லாம் தனக்கென்று எண்ணுவோரின் ஆட்சி

ஐந்தில் நால்வர் நல்லவர் ஆட்சியில்
ஐந்தில் நால்வர் கெட்டவர் ஆட்சியில்

ஒற்றுமையும் ஒழுக்கமும் நிறைந்து இருந்தது
ஒன்றன்பின் ஒன்றாக இரண்டுமே குறைந்தது

ஓசையின்றி இந்தியா வலுவிழந்து உள்ளது
ஓரளவாவது உணர்ந்தால் நாட்டுக்கு நல்லது

(ஒளவை பிறந்து தமிழை வளர்த்தார் அன்று
ஔடதம் குடித்து அத்தமிழே இறக்கும் இன்று) 

உயிர் இந்தியா  ............  இந்தியா ஆகாமல் பார்த்துக்கொள்வது நம் கையில் தான் உள்ளது  


           
 

No comments:

Post a Comment