உயிர் (எழுத்து) தாய்
Tuesday, 31 January 2012
mother
தாய்
கருவறையில் நாம் காத்திருந்த போது
கஷ்டப்பட்டு நம்மை காத்திருந்த சாது
இருட்டறையென நாம் அஞ்சியதை பார்த்து
இஷ்டப்பட்டு நம்மை அரவணைத்தால் சேர்த்து
தந்தையை யாரென சொல்வதும் அவளே
தரணியில் முதலிடம் வெல்வதும் அவளே
சிந்தை முழுவதும் வியாபித்து நின்றாயே!
சிறுவன் எனக்காக மறுமுறை பிறந்தாயே!!
Monday, 30 January 2012
uyir(eluthu)kaadhalargal
உயிர்(எழுத்து)காதலர்கள்
காதலன்:அழகால் என்னை கவர்ந்துவிட்டாய்
ஆயுதமின்றி என்னை கொன்றுவிட்டாய்
இமைத்தால் போதும் இந்நொடியே
ஈருடல் ஓருயிர் என்றிருப்போம்
உன்னுடன் நானும் சேர்ந்துவிட்டால்
ஊரே எதிர்ப்பினும் விடமாட்டேன்
என்னுயிர் தாவென நீ கேட்டால்
ஏனென்று கேளாமல் உயிர்விடுவேன்
ஐயமின்றி நான் சொல்கிறேன்
ஒருநாள் வாழ்க்கை என்றாலும்
ஓலைக்குடிசையில் என்றாலும்
உன்னுடன்தான்.
காதலி: அன்பால் என்னை ஈர்த்துவிட்டாய்
ஆயினும் என்னால் முடியாது
இருக்கிறேன் என்பதன் காரணமே
ஈன்றெடுத்த என் பெற்றோரே
உன்னுடன் நான் வந்துவிட்டால்
ஊரே ஏசும் பரவாஇல்லை
என் பெற்றோரே எனை எதிர்த்தால்
ஏகப்பட்ட வருத்தம் வரும்
ஐயமின்றி நான் வரமாட்டேன்
ஒன்றை சொல்கிறேன் கேட்டுவிடு
ஓரமாய் ஒதுங்கி எனை
விட்டுவிடு
Sunday, 29 January 2012
don't kill yourself
உன்னைக் கொல்லாதே
கலிகால வெள்ளம் வருகையிலே ...
நெட்டுக் குத்து மரங்களெல்லாம்
விட்டுக்கொடுக்காமல் வீழ்ந்து விடும்
சாய்ந்து கொடுக்கும் பசும்புல்லோ
வாய்ப்பு பெற்று வாழ்ந்து விடும்
சுழலும் பூமி நிற்கவில்லை இன்று
நாளை தொடருமா தெரியவில்லை
நிழலும் நிற்காது உனக்காக என்று
தெரிந்துகொண்டால் பயமில்லை
வானத்தில் பறக்கும் சக்தி பெற்றும்
நீரின் மேல் மிதக்கும் கருவி பெற்றும்
ஞானத்தில் திளைக்கும் அறிவு இன்றி
பாரின் மேல் வாழ்வது கடினமன்றோ?
உன் கையில் எதுவும் இல்லை
வாழ்க்கையில் அர்த்தம் எதுவுமில்லை
வருகிறோம் வாழ்கிறோம் போகிறோம்
நிலைத்து யாரும் நிற்பதில்லை
வாழ்க்கையின் அர்த்தம் தெரிந்தால் தான்
வாழ்வேன் என நீ சொன்னால்
வாழும் உயிர்கள் அனைத்தையும்
உன்னுடன் அழைத்துச் சென்றுவிடு
Thursday, 26 January 2012
India (anrum, inrum)
உயிர்(எழுத்து)இந்தியா
(அன்றும் இன்றும்)
அன்னியர் ஆட்சியை அகற்றிய நாடு
அதன்பின் அரசியல்வாதி கைப்பற்றிய நாடு
ஆங்கிலேயர் ஆட்சியே நல்லது என்று
ஆமோதிக்கும் அளவு உள்ளது இன்று
இதிகாசம் இலக்கியங்கள் பல பார்த்திருக்கின்றது
இறக்கம் கொண்டு குற்றத்தை ஊக்குவிக்கன்றது
ஈடு இணையற்ற இந்திய நாடு
ஈரமும் இரக்கமும் மறந்த நாடு
உலகத்தில் வளங்களில் முதலிடம் பெற்றது
உலகத்தில் ஊழலில் முதலிடம் பெற்றது
ஊரெங்கும் கலையும் கலாச்சாரமும் சிறந்தது
ஊறிய நாகரிகத்தில் அவ்விரண்டும் இறந்தது
எதுவும் தனக்கென்று எண்ணாதோரின் ஆட்சி
எல்லாம் தனக்கென்று எண்ணுவோரின் ஆட்சி
ஐந்தில் நால்வர் நல்லவர் ஆட்சியில்
ஐந்தில் நால்வர் கெட்டவர் ஆட்சியில்
ஒற்றுமையும் ஒழுக்கமும் நிறைந்து இருந்தது
ஒன்றன்பின் ஒன்றாக இரண்டுமே குறைந்தது
ஓசையின்றி இந்தியா வலுவிழந்து உள்ளது
ஓரளவாவது உணர்ந்தால் நாட்டுக்கு நல்லது
(ஒளவை பிறந்து தமிழை வளர்த்தார் அன்று
ஔடதம் குடித்து அத்தமிழே இறக்கும் இன்று)
உயிர் இந்தியா ............ இந்தியா ஆகாமல் பார்த்துக்கொள்வது நம் கையில் தான் உள்ளது
உயிர் இந்தியா ............ இந்தியா ஆகாமல் பார்த்துக்கொள்வது நம் கையில் தான் உள்ளது
Monday, 23 January 2012
iraivanaai paarkaadhe!!!
இறைவனாய் பார்க்காதே
அமைதியாய் இருந்திடு மருத்துவ அலுவலகத்தில்
அதுவே கோயிலுக்கு அடுத்தது இவ்வுலகத்தில்
அனுமதியின்றி வருவது கொடிய நோயே
அலறியோட வைப்பது நம் மருத்துவத் தாயே
ஆபத்தை தருகின்ற நோயினைக் கொன்று
ஆண்டவனாய் நிற்கின்ற மருத்துவம் நன்று
ஆலயத்தில் மந்திரத்தை ஓதும் ஐயர்
ஆண்டவனான மருத்துவத்தை செய்யும் மருத்துவர்
இறைவனின் அருளால் உயிர் பிழைப்பதுண்டு
இறைவனே ஐயர் என புகழ்வதுண்டு
இன்னுயிர் போய்விடின் மருத்துவரை பிடிப்பதுண்டு
இறைவனை விட்டுவிட்டு ஐயரை அடிப்பதுண்டு
ஈரநெஞ்சம் கொண்ட மருத்துவர் மேல்
ஈவு இறக்கம் காட்டுவீர் இனிமேல்
ஈன்ற குழந்தை பிறந்தநாள் முதல் வேண்டும்
ஈமச்சடங்கு வரை மருத்துவம் வேண்டும்
உறவுக்கு உயிர்போனால் உதைக்காதே மருத்துவரை
உணர்ச்சிகளுக்கு வசப்பட்டு செய்யாதே பெருந்தவறை
உயிர்காக்கும் தொழிலுக்கு மரியாதை வழங்கிடு
உண்மையிலேயே தவிறிருந்தால் நீதிகேட்டு வழக்கிடு
ஊரே போற்றிடும் உன்னத தொழில்
ஊக்கத்துடன் செய்திட பெற்றிடும் எழில்
ஊமையும் குருடனும் மறுவாழ்வு பெறுவதுண்டு
ஊழையும் வென்று உயிரைத் தருவதுமுண்டு
எத்தனையோ சாதித்தாலும் பணிவு உண்டு
எமனையே எதிர்க்கின்ற துணிவு உண்டு
என்றும் நிலைத்திடும் நல்ல மருத்துவம்
என்றுமே அழியாது அதன் மகத்துவம்
ஏமாற்றம் தாராத துறையும் உண்டோ?
ஏளனப் படுத்துவதில் நியாயம் உண்டோ?
ஏற்றமும் இரக்கமும் இயற்கை தானே
ஏன் இறங்குகிறாய் வன்முறையில் வீணே
ஐயமில்லை என்பதில்லை என்றும் மருத்துவத்தில்
ஐக்கியம் ஆகிவிடு அதன் தத்துவத்தில்
ஐந்து விரலால் எழுதப்படும் மருந்து
ஐயமில்லை தலைவிதியாய் விளங்கும் சிறந்து
ஒட்டி பிறக்கும் குழந்தைகளைப் பிரிப்பதுண்டு
ஒருசில சமயத்தில் குழந்தை இறப்பதுண்டு
ஒருமருந்தும் அமிர்தம் கிடையாது மனிதனே
ஒத்துக்கொள்ள வேண்டுமே மருத்துவனும் மனிதனே
ஓதுவது மட்டும்தான் ஐயரின் வேலை
ஓருயிரை காப்பாற்றுவதோ இறைவனின் லீலை
ஓர் இறைவனாய் மருத்துவரைப் பார்க்காதே!
ஓருயிர் பிரிந்தால் மருத்துவரைத் தாக்காதே!!
Subscribe to:
Posts (Atom)



