நடைப்பயிற்சி
கட கட கடவென காலையில் நட
கரங்களை வீசி விரைவாக நட
தட தட தடவென தரணியில் நட
தடகள வீரனை போல தலை நிமிர்ந்து நட
குறைந்திருக்கும் உடலின் கொழுப்பின் எடை
நிறைந்திருக்கும் உடலில் எதிர்க்கும் படை
சீராக வைத்திடும் இரத்த கொதிப்பு
வாராது இனிமேல் இருதய பாதிப்பு
மூச்சு வாங்க தினமும் நடையாத்திரை
தூக்கம் வாங்க தேவையில்லை இனிமாத்திரை
நரம்பெல்லாம் நல்ல சக்தி பெரும்
வரம்பின்றி இரத்தம் நன்கு ஓடும்
தசைகள் எல்லாம் புத்துயிர் பெரும்
தலைமுதல் கால்வரை புத்துணர்வு தரும்
தரைபார்க்கும் கூஉநி வராமல் இருக்கும்
தடுமாறும் உடல்நலம் கெடாமல் இருக்கும்
சர்க்கரை நோயினை கட்டுக்குள் வைக்கும்
சகல நோய்களும் வராமல் தடுக்கும்
சமர்பித்த கருத்துக்கள் உண்மையே ஏற்றுக்கொள்
சந்தேகம் இருப்பின் மருத்துவரை கேட்டுக்கொள்
நாளும் நலமாக வாழ வேண்டுமா?
வாழும் காலம் நீள வேண்டுமா?
இன்றே தொடங்குவோம் புதுமுயற்சி
நன்றே பழகுவோம் நடைப்பயிற்சி
No comments:
Post a Comment